வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு

0 416
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 27 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரம் பிச்சாண்டார்கோயில் வருவாய் கிராமத்தில் வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) சாந்தி வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட செயல்விளக்க திடல், விதை பண்ணை வயல், பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்டார். விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள், பேட்டரி தெளிப்பான் ஆகியவைகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது மண்ணச்சநல்லூர் வட்டாரத்தின் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி, வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா, துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி, வேளாண்மை உதவி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.