பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கைபம்பு, புதிய தார்ச்சாலை : அமைச்சர் அன்பில் மகேஸ் அர்ப்பணித்தார்
திருச்சி, மார்3 திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட அய்யம்பட்டி பொன்நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கைப்பம்பு, வாழவந்தான்கோட்டை, அன்னை தெரசா நகர் பகுதியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார்ச்சாலையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்வில் ஒன்றியக் கழகச் செயலாளர் கருணாநிதி சேர்மன் சத்யா மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.