மணப்பாறையில் நடைபெற்ற “ஹாப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி

0 425
Stalin trichy visit

திருச்சி, ஆக. 5  மணவை மக்களின் மனங்களை குளிர்விக்க நடந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி
ஆடிப்பாடி மகிழ்ந்த இளம்பட்டாளம்

வாரம் முழுவதும் வேலை பளு என்ற போது ஒரு நாள் உடலுக்கு ஓய்வு என்பதும் அவசியம் என்பதை மறுக்க முடியாது. அதையும் தாண்டி மனமும் அமைதி பெற வேண்டுமல்லவா, அதனால் தான் பல நகரங்களில் ஹாப்பி ஸ்ட்ரீட் மூலம் பலரும் ஓரிடத்தில் திரண்டு ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

இதே போல் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஏ.பி. சரவணன் தலைமையில் நேற்று ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. மேடையில் சிலர் ஆட மேடைக்கு முன்பு இளம் பாட்டாளமே திரண்டு வந்து நின்று ஆடிப்பாடி உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். எங்கு திரும்பினும் இளம்தலைமுறையினரின் நடனம் தான். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த மனமகிழ் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விதவிதமான அதிரடி பாடல்களுக்கு ஆடி மகிழ்ந்து சென்றனர். மணவை வரலாற்றில் முதல் முறை என்பதால் நிகழ்வை காணவும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கண்டு ரசித்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.