துறையூரில் பெய்த பலத்த மழை
திருச்சி, அக். 5 திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது இதனால் பொதுமக்கள் புழுக்கத்தில் வாடி வந்தனர் இந்நிலையில் நேற்று மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதை அடுத்து பலத்த மழை பொழிய தொடங்கியது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை வெளுத்து வாங்கியது இதில் துறையூர் நகர் பகுதி கீரம்பூர் பெருமாள்மலைஅடிவாரம் சிக்கத்தம்பூர் பாளையம் காளிப்பட்டி சொரத்தூர் வெங்கடேசபுரம் கோவிந்தபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் துறையூர் பகுதியில் வெய்யிலின் தாக்கம் குறைந்து தற்போது குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.