சுங்கச்சாவடியில் நெடுஞ்சாலை துறை சிறப்பு மருத்துவ முகாம்
சுங்கச்சாவடியில் நெடுஞ்சாலை துறை சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில் திண்டுக்கல் ஜேசிபி மருத்துவமனையும் வாசன் கண் மருத்துவமனையூம் இணைந்து சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் நரசிம்மன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் நெடுஞ்சாலைத்துறை டீம் லீடர் குருசாமி. விழாவில் மரம் நடும் விழா மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த முறையில் பணியாற்றிய பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சுங்கச்சாவடி புராஜெக்ட் மேலாளர் செந்தில்குமரன் சிறப்புரையாற்றினார். சுங்கச்சாவடி மேலாளர் பெரியராஜ் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் உடன் ஸ்டீபன்பாபு (ரேசி ப்ராஜெக்ட்) மேலாளர் உதயசங்கர் மற்றும் கிராமத்தைச் சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர் சிறப்பு முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் வேண்டிய உதவிகளை சுங்கச்சாவடி பணியாளர்கள் செய்துள்ளனர்.