டிராக்டர் கடனுக்காக விவசாயி நிலத்தை ஜப்தி செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

0 284
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கரும்புளிபட்டியை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் என்பவர் கடந்த 2007ஆம் ஆண்டு குளித்தலையில் உள்ள எஸ்பிஐ வங்கியில் டிராக்டர் வாங்க ரூபாய் 14 லட்சம் கடன் பெற்றுள்ளார். ரூ.7.50 லட்சம் திருப்பி செலுத்திய நிலையில் மீத தொகையை செலுத்த வில்லை எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் பன்னீர் செல்வத்தின் நிலத்தை ரூ 58 லட்சத்திற்கு ஏலம் விட்ட வங்கி நிர்வாகம் அவரது 11 ½ ஏக்கர் நிலத்தை ஜப்தி செய்தது. இதற்கு பல்வேறு விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கரும்புளிபட்டியைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வத்தின் 11 ½ ஏக்கர் நிலத்தை ஜப்தி செய்ததை கண்டித்தும் சம்பந்தப்பட்ட வங்கி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.