100 ஆண்டுகளாக தரமான கல்விச் சேவையினை வழங்கி வரும் புனித சிலுவைக் கல்லூரி : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு

0 238
Stalin trichy visit

 

திருச்சி புனித சிலுவைக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில்,

நூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண்களின் கல்விப் பணியில் ஈடுபட்டுவரும் புனித சிலுவை கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. பல்லாயிரம் சாதனை பெண்களை உருவாக்கிய பெருமை புனித சிலுவை கல்லூரிக்கு உண்டு

100 ஆண்டுகளைக் கடந்தும் சோர்வடையாமல், சிறிதும் சமரசம் இல்லாமல் தரமான கல்விச் சேவை வழங்கி வருவதற்கு எனது நன்றிகள்.

100 முதல் தலைமுறை பெண்களுக்குக் கல்லூரி சார்பாகக் கல்வி உதவிகள் வழங்கும் ‘விழுதுகள் 100’ எனும் திட்டத்தினையும் துவக்கி வைத்தேன் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.