நாங்களல்லாம் எவ்வளவு பெரிய மூளைக்காரங்க – தண்ணில சைக்கிள் ஓட்டுவோம்ல…

0 378
Stalin trichy visit

 

திருச்சி பச்சைமலை மற்றும் கொல்லிமலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக துறையூர் நகரில் உள்ள பெரிய ஏரி கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் நிறைந்து வழிந்தது – வெள்ள நீரில் ஆபத்தை  உணராமல் குதித்து விளையாடுவதோடு சைக்கிள் ஓட்டி மகிழும் இளைஞர்கள்…

திருச்சி துறையூர் நகரப் பகுதியில் உள்ள பெரிய ஏரி கடந்த ஆண்டு போல் தற்போதும் நிறைந்து வழிந்துள்ளது துறையூர் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

சுமார் 255 ஏக்கர் பரப்பளவு கொள்ளளவு கொண்ட இந்த ஏரி 16 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டி இருந்தது – அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாமக்கல், கொல்லிமலை மற்றும் பச்சைமலை அடிவாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நிரம்பி வழிந்தது – துறையூர் நகரில் உள்ள பொதுமக்கள் கலங்குகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

அதே நேரம் ஏரியிலிருந்து நீர் வழிந்து ஓடும் கலங்குகளில் குதித்து விளையாடும் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் குளிப்பதோடு சைக்கிள் ஓட்டி விளையாடி வருகின்றனர் – மழைக்காலங்களில் இது போன்ற நீர் நிலைகள் நிறைந்து வழிவது இயல்பான ஒன்று என்றாலும் விளையாட்டாக இளைஞர்கள் குதித்து விளையாடுவதால் பல நேரங்களில் விபத்துக்கள் நேரில் தொடர் கதையாகி வருகிறது

Leave A Reply

Your email address will not be published.