காப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 2 குழந்தைகள் இறந்தது எப்படி?

0 293
Stalin trichy visit

திருச்சி, ஏப்.14 திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாம்பழச்சாலை பகுதியில் சாக்சீடு புனித மார்டின் சிறப்பு தத்து வள மையம் என்ற காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பராமரிக்கப்பட்ட 9 பச்சிளம் குழந்தைகள் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தன. அதில் 2 குழந்தைகள் நேற்று முன்தினம் ஒரே நாளில் மரணம் அடைந்தன. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பெரம்பலூரில் இருந்து கொண்டு வரப்பட்ட 4 மாத பெண் குழந்தை கடுமையான மூச்சுக்குழாய் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு இருந்தது. புதுக்கோட்டையில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 நாட்களான பெண் குழந்தை மரபணு சார்ந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தது. இரு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி 12-ந்தேதி (நேற்று முன்தினம்) இறந்தன. மேலும் மற்ற குழந்தைகளை பராமரிக்க தத்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு, கூடுதலாக ஆயாக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு மருத்துவர் தினமும் குழந்தைகளை நேரில் சென்று கண்காணித்து வருகிறார் என்று கூறப்பட்டு இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.