கணவன் கண்முன்னே உடல் நசுங்கி மனைவி பலி!

0 466
Stalin trichy visit

திருச்சி வடக்கு காட்டூர் பாப்பாக்குறிச்சி பாரத் அவென்யூவை சேர்ந்தவர் பஷீர் அகமது. இவரது மனைவி பதுர்னிஷா(வயது47). இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சா லையில் பைக்கில் சென்றனர். காட்டூர் ஆயில் மில் அருகே உள்ள போலீஸ்

 

 சோதனைச்சாவடி அருகே சென்றபோது பின் னால் வந்த டிப்பர் லாரி, மொபட் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந் திருந்த பதுர்னிஷா நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது டிப்பர் லாரி டயர் ஏறி இறங்கி சம்பவ இடத்தி லேயே பதுர்னிஷா, கணவரின் கண்முன்னே உயிரிழந்தார். இதனைப் பார்த்த பஷீர் அகமது

 

 கண்ணீர் விட்டு கதறி அழுதார். விபத்து குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவரான கரூர் குப்பணம்பட்டி பாப்பக் காப்பட்டியை சேர்ந்த துரைக்கண்ணுவை (வயது 33) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.