மனைவியை ஆபாசமாக படமெடுத்து சமூக வளைதளத்தில் பரப்பிய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை

0 322
Stalin trichy visit

தனது மனைவியை ஆபாசமாக படம் எடுத்து சமூக ஊடங்களில் பரப்பிய கணவருக்கு 5 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,20,000/- அபராதம் விதித்து திருச்சி JM II நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 19.03.2018ந்தேதி திருச்சி காவல் ஆணையரிடம், பெண் ஒருவர் தன்னை ஆபாசமாக படம் பிடித்து ‘சமூக ஊடங்களில் பதிவேற்றம் செய்ய போவதாக கணவர் மிரட்டுவதாக கொடுத்த புகாரின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில், கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து, கரூரை சேர்ந்த எதிரி தேவ்ஆன்ந்த் 41/23 த.பெ.முத்துகருப்பன் என்பவரை கைது செய்யப்பட்டு, கடந்த 20.09.2018-ந்தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் திருச்சி JM II நீதிமன்றத்தின்  நீதிபதி  பாலாஜி விசாரணையை முடித்து இன்று 10.04..2023-ம்தேதி, மேற்படி எதிரி தேவ்ஆன்ந்த் என்பவருக்கு ச/பி 498 (A) IPC ன்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், ச/பி 354 (D) IPC ன்படி 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், ச/பி 67 IT Act ன்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,00,000/- அபராதமும் ஆக (மொத்தம் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,20,000/- அபராதம்) விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1,20,000/- இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என  நீதிபதி பாலாஜி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் பேபி ஷகிலா  ஆஜரானார்கள்.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.ஆனந்தி வேதவள்ளி மற்றும் புலன்விசாரணையில் உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர்  சத்திய பிரியா பாரட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.