“காவிரி குழுமத்தோடு இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” – பிராண்ட் தூதுவர் எம்.எஸ். தோனி!

0 464
Stalin trichy visit

தமிழகத்தில் உடல்நலம் மற்றும் மருத்துவமனைகளில் ஒரு முன்னணி சங்கிலித்தொடர் நிறுவனமாக காவிரி குழும மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ் தோனியை தனது பிராண்ட் தூதுவராக காவேரி குழுமம் இணைத்துள்ளது.

இதுகுறித்து பேசிய காவேரி தூதுவரான எம்.எஸ் தோனி….”நோயாளிகள் மீது கனிவான அக்கறை கொண்டு, சிறப்பு கவனம் செலுத்தி மிக சிறப்பான மருத்துவ சேவைகளை காவேரி குழும மருத்துவமனைகள் வழங்கி வருகின்றன. இந்தியாவின் அதிக நம்பிக்கை மற்றும் பிரபல சுகாதார நிறுவனமாக காவிரி குழுமத்தோடு இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்

மேலும் இதுகுறித்து காவிரி குழும மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மணிவண்ணன் பேசுகையில்… “திருச்சி மாநகரில் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையுடன் எங்கள் பயணத்தை தொடங்கினோம். இப்போது தமிழ்நாடு முழுவதும் மற்றும் பெங்களூரிலும் நிலைகொண்டு 1,500 படுக்கை வசதிகளுடன் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை குழுமமாக நாங்கள் வளர்ந்திருக்கிறோம்.

ஒருசிறு நகரத்தைச் சேர்ந்தவர் எம்.எஸ் தோனி. தனது தளராத நம்பிக்கை, திறமை மற்றும் விடா முயற்சி காரணமாக கிரிக்கெட் உலகின் மிக உயர்ந்த இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். காவிரி குழுமத்தின் பயணமும் தோனியின் பயணமும் ஒரே மாதிரி அமைந்திருக்கின்றன. மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல வாழ்வை இன்னும் ஊக்குவிப்பதற்காக பிராண்ட் தூதுவராக எம்எஸ் தோனி நிச்சயம் உதவுவார்” என்றார்

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

 

Leave A Reply

Your email address will not be published.