சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியை மாற்ற பாடுபடுவேன்; புதிதாக பொறுப்பேற்ற மேயர் அன்பழகன் பேட்டி!

0 356
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சியின் ஏழாவது மேயராக அன்பழகன் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் பதவி ஏற்றதும், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். நிருபர்களிடம் அன்பழகன் கூறியதாவது:-
நான் திருச்சி மாநகராட்சியில் இரண்டு முறை துணை மேயராக இருந்து உள்ளேன். மேயராக ஆக வேண்டும் என்பது எனது கனவு. அந்த கனவு இன்று நிறைவேறியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் மூலமாக எனது ஆசை

நிறைவேறியுள்ளது. அமைச்சர் கே.என்.நேரு திருச்சிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அந்தத் திட்டங்களை அமைச்சர் நேருவின் சார்பில் நின்று விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக மாற்ற பாடுபடுவேன். சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியை சிறந்த மாநகரமாக மாற்ற பாடுபடுவேன். எனது முதல் பணி தூய்மைப் பணி. கடந்த 6 ஆண்டுகளாக தூய்மைப்பணி சரிவர நடக்கவில்லை. இனி தூய்மைப் பணியை செவ்வனே செய்து தூய்மையான நகராக திருச்சியை மாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.