சமயபுரம் சந்தையில் ஆடுகள் விலை உயர்வால் விற்பனை மந்தம்

0 398
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் ஆடு வாரச்சந்தையில் ஆடுகளின் விலை உயர்வால் விற்பனை மந்தம். கொள்முதல் செய்யாமல் திரும்பிச் சென்ற வியாபாரிகள்.

சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் ஆடு வார சந்தை நடைபெற்று வருகிறது. பண்டிகை நாட்களில் ஆடுவர சந்தையில் பல லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் இந்நிலையில் சமயபுரம் ஆட்டு சந்தையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் விற்பதற்காக பெரம்பலூர் அரியலூர் நாமக்கல்,லால்குடி,கல்லக்குடி,புள்ளம்பாடி சிறுகனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து விற்பனையாளர்கள் ஆடுகளை கொண்டு வந்தனர். பொங்கல் பண்டிகை முன்னிட்டு வியாபாரிகளும் ஆடுகளை கொள்முதல் செய்வதற்காக அதிகளவில் குவிந்தனர். ஆனால் ஆடுகளின் விலை உயர்வால் கொள்முதல் செய்யாமல் வியாபாரிகள் திரும்பியதால் விற்பனை மந்தமாக நடைப்பெற்றது.வழக்கத்தை விட பல லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் விற்பனை மந்தம் நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.