தண்டலை புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

0 512
Stalin trichy visit

.

திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் சார்பில் தண்டலை புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா செல்வ நாயகம் அனைவரையும் வரவேற்றார்.
ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் சமத்துவ பொங்கல் அவசியம் குறித்தும் கொண்டாடுவதின் நோக்கம் குறித்தும் அனைவருக்கும் எடுத்துரைத்து பொங்கல் வழங்கினர் இந்நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் நிறைவில் ஊராட்சி செயலர் தீபன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.