திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் சில்லறை மது விற்பனை போன்ற சட்ட விரோத குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் கடந்த 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை திருச்சி மாநகர கன்டோன்மென்ட், பொன்மலை, கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் காவல் சரகங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு தணிக்கையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 31 நபர்கள் மீது 16 வழக்குகளும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 10 நபர்கள் மீது 5 வழக்குகள் பதியப்பட்டு அவரிடம் இருந்து மொத்தமாக 4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
மேலும் சில்லறை மது விற்பனை செய்த 39 நபர்கள் மீது 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 271 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 46 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் சில்லறை மது விற்பனை போன்ற சட்ட விரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய நபர்கள் என மொத்தமாக 126 நபர்கள் மீது 106 வழக்குகளை மூன்று நாட்களில் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து தனிப்படை போலீசார் மற்றும் காவல் நிலைய போலீசார் திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.