சென்னை புத்தகரத்தில் யோகக்குடில் என்ற பெயரில் ஆசிரமம் நடத்திவரும் சாமியார் சிவக்குமார், மதவுணர்வுகள் கடுமையாக புண்படும்படி தகாத வார்த்தை கூறி தொடர்ச்சியாக இருபதுக்கும் மேற்ப்பட்ட யூடியூப் வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த 26.7.2021 அன்று திருச்சி மாநகர கமிஷனரிடமும், உறையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சிவக்குமார் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு இன்று திருச்சி குற்றவியல் நடுவர் எண் 4 முன்பாக நீதிமன்ற காவலுக்காக ஆஜர்படுத்தப்பட்டார். குற்றச் செயல்களுக்காக சிவக்குமாரை 13.10.2021 வரை இவ்வழக்கில் சிறையிலடைக்க உத்தரவு பிறப்பித்தார்.