அரசு உதவி பெறும் பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை திறப்பு

0 259
Stalin trichy visit

கல்லக்குடியில் ரூ.3.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிப்பறையை இன்று திறந்து வைத்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம்
கல்லக்குடியில் உள்ள தூய சவேரியார் நடுநிலைப்பள்ளியில் டால்மியா பாரத் பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் ரூ.3.35 லட்சம் செலவில் பள்ளி மாணவிகளுக்கான புதிய கழிப்பறை வசதி கட்டுப்பாட்டு மாணவிகளின் பயன்பாட்டிற்க்காக இன்று திறந்து வைக்கப்பட்டது.இதில் டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லக்குடி பங்குத்தந்தை சந்தியாகு முன்னிலை வகித்தார் .

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி மங்கலம் வரவேற்புரை கூறி அனைவரையும் சிறப்பித்தார். உடன் டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ரமேஷ் பாபு , ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், மாணவ மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் டால்மியா பாரத் பவுண்டேஷன் மேலாளர் திரு நாகராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

அதைத்தொடர்ந்து புதூர் பாளையத்தில் உள்ள பாய் குளத்தை டால்மியா பாரத் பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பாக ரூபாய்.4.60 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் திரு விநாயகமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு குளம் தூர்வாரப்பட்டதற்கான கல்வெட்டினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதூர்பாளையம் ஊராட்சி மன்ற தலைவி திருமதி, நளினி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார் உடன் துணைத் தலைவர் திரு சங்கர் , வார்டு உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.