திருச்சி புத்தகத் திருவிழா விழிப்புணர்வுப் பேரணி
திருச்சி புத்தகத் திருவிழா வருகின்ற செப்டம்பர் 16 முதல் 26 வரை திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் இருந்து திருச்சி புத்தகத் திருவிழா விழிப்புணர்வுப் பேரணியை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று (13.9.22) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன், , வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அ. சௌந்தர பாண்டியன், செ.ஸ்டாலின் குமார்,எம். பழனியாண்டி,, மாவட்ட ஊராட்சித் தலைவர் த.இராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.