கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் அனைத்து மன்றங்களின் தொடக்க விழா

0 241
Stalin trichy visit

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் அனைத்து மன்றங்களின் தொடக்க விழா நடைபெற்றது.

NSS, YRC, RRC, பாலின மன்றம், தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம், நுகர்வோர் மன்றம், மதுபோதைக்கு எதிரானக் குழு, சாலைப் பாதுகாப்பு க் குழு உள்ளிட்ட மன்றங்களின் தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.நடராஜன் அவர்கள் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக பத்மஸ்ரீ கிராமாலயா தாமோதரன் அவர்கள் கலந்து கொண்டார். சிறந்த சமூக சேவைக்கான தமிழ்நாடு அரசின் விருது வென்ற இளைஞர் மனிதம் தினேஷ் அவர்கள் பங்கேற்றார்.

நிகழ்வில் உரையாற்றிய பத்மஸ்ரீ தாமோதரன் அவர்கள் கல்வியோடு கூடிய சமூகச் சேவையில் கலையும் இணைந்தால்தான் முழுமைபெறும். கலைத்துறை சார் மாணவர்கள் சமூகப் பணியிலும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். எந்தத் துறையில் சாதிக்க வேண்டும், என்ற இலக்கும் கனவும் கொண்டு செயல்பட்டால் வெற்றிபெற முடியும் என்றார்.

தொடர்ந்து பேசிய மனிதம் தினேஷ் அவர்கள் இளைய தலைமுறையினர் சாதிக்க ஏராள வாய்ப்புகளும் களங்களும் உண்டு. திசை திரும்பாமல் திசை வேகம் குறையாமல் எடுத்துக்கொண்ட துறையில் உறுதியுடன் வெல்ல மனிதம் வளர்த்திட சமூகத்தை புரிந்துகொள்ள தன்னைப் புரிந்துக்கொள்ள இது போன்ற மன்றங்கள் துணை புரிகின்றது. இதுபோன்ற மன்றங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் இணைந்து செயலாற்ற முன் வர வேண்டும் என்றார்.

முன்னதாக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் வரவேற்புரையாற்றினார். முனைவர் இல.கோவிந்தன் நன்றி கூறினார்.

தண்ணீர் அமைப்பின் செயல்தலைவர் திரு. கே.சி. நீலமேகம் பங்கேற்றார்.

நிகழ்வின் தொடக்கத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வுப் பாடல் மற்றும் பிளாஷ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பாடலை ஆகாஷ் குழுவினர் பாடினர்.

மன்ற ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் முனைவர் சுனிதா, முனைவர் புவனேஸ்வரி, முனைவர் பானுமதி ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.