திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நாடக மன்றத் தொடக்க விழா

0 353
Stalin trichy visit

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத் துறையின் நாடக மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. பணிமுறை இரண்டு தமிழ்த்துறையின் ஒருங்கிணைப்பாளரும் நாடக மன்றத் தலைவருமான முனைவர் சு.சீனிவாசன் வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் த.ரவீந்திரன் தலைமை வகித்தார். தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி முன்னிலை வகித்தார்.

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கி.சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். தம் சிறப்புரையில் சைவம், வைணவம், கிறித்தவம், இசுலாமியம் ஆகிய நான்கு சமயங்களும் ஒருங்கே அமைந்து அறம் வளர்க்கும் திருச்சிராப்பள்ளி மண்ணில் கல்வியால் வியக்கத்தக்க பணி செய்து வரும் இக்கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற்றவர்களாக உருவாக்கும் கல்லூரி. அரசுப் பள்ளிகளில் கலை விழாக்கள் நடத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ள இச்சூழலில் நீங்கள் அத்துறையில் சரியான பயிற்சி பெற வேண்டும் என்ற நோக்கில் இன்று தொடங்கப்படும் தமிழ் நாடக மன்றத்தை வாழ்த்தினார். தமிழாசிரியர்கள் இயல் இசை நாடகத்தில் தேர்ச்சி பெறுதல் காலத்தின் கட்டாயம் , தமிழ்ச் சமூகத்தை உயிர்ப்போடு காலந்தோறும் இயங்க வைத்தவை நாடகங்கள்தான், விடுதலைப் போராட்ட காலங்களில் விடுதலைக்குப் பிறகு பின்பு சமூக மாற்று சிந்தனைகளை விதைக்கவும், முற்போக்கு சிந்தனைகள, சாதி ஆதிக்க வர்க்க ஒடுக்குமுறைக்கும் அதிகார வர்க்கங்களை நோக்கி கேள்வி எழுப்பி உரிமைகளை நோக்கி மனித சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி அழைத்துச் சென்றது நாடகங்கள்தான்.இத்தகைய நாடகங்களில் காலந்தோறும் இயங்கிய நாடகக் கலைஞர்களை போற்றிப் பாதுகாத்திட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. திருச்சி மாவட்டத்தில் உள்ள நாடகக்கலைஞர்களை பாதுகாத்தட வேண்டும். மாணவர்களுக்கு நாடகங்களில் சிறந்த எதிர்காலம் உண்டு. மொழித் திறனில் குரல்வளத்தில் உடல்நலத்தில் தேர்ச்சி பெறுவதற்கான சிறப்பானக் களத்தை நாடகம் உருவாக்கும் .கலை அறிவியல் கல்லூரிகளில் மட்டுமின்றி பொறியியல் கல்லூரிகளிலும் இரண்டாண்டுகள் மொழிப் பாடம் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.
தாய்மொழிக் கல்வியும் இலக்கியங்களும்தான் ஆளுமைமிக்க மாணவர்களை ஆக்கமான சமூகத்தை உருவாக்கிடும் என்றார்.

தொடக்க விழாவில் தமிழ் இலக்கிய மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர். தொடக்க விழாவிற்குப் பிறகு நாடகமன்றத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு ஒருநாள் நாடகப் பயிற்சி முனைவர் கி.சதீஷ்குமார் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டது.

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சி.யோகராஜ் நன்றியுரையாற்றினார். இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி அ.யாழினி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்

Leave A Reply

Your email address will not be published.