காந்தி மார்க்கெட்டில் உயர் கோபுர கண்காணிப்பு அறை திறப்பு
திருச்சி, ஜுன் 1 திருச்சி காந்தி மார்க்கெட்டில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய உயர் கோபுர கண்காணிப்பு அறையை திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா, மண்டலம்_3கோட்டத் தலைவர் மதிவாணன், மண்டலம்_2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா , மாமன்ற உறுப்பினர் சண்முகப்பிரியா மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகளும்
மற்றும் பகுதி செயலாளரும் வட்டக் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் பங்கேற்றனர்.