திருச்சியில் புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைப்பு

0 294
Stalin trichy visit

திருச்சி, செப்.5 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தினை சென்னையில் இருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக இன்று (5.9.22) தொடங்கி வைத்து அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித் தொகையினை வழங்கினார். இதனைத் தொடர்ந்து,திருச்சி கலையரங்கில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதாந்திர உதவித் தொகையினை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், இனிகோ இருதயராஜ், அப்துல்சமது, மாவட்ட ஊராட்சித் தலைவர் இராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மாவட்ட சமூக நல அலுவலர் மா.நித்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.