காஜாமலை பகுதியில் நகர்ப்புற ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு
திருச்சி, பிப். 16 திருச்சி மாநகராட்சி வார்டு எண்.60க்குட்பட்ட பகுதியில் 15வது நிதித்திட்ம் (சுகாதாரம்) கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், நகர பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.