தேசிய அளவிலான எலக்ட்ரோ ஹோமியோபதி கருத்தரங்கம்

0 165
Stalin trichy visit

திருச்சி, பிப்.16 எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்திற்கு மத்திய மாநில சுகாதாரத்துறை அங்கீகாரம் வழங்க வேண்டும் – தேசிய கருத்தரங்கில் கோரிக்கை.

7வது தேசிய அளவிலான எலக்ட்ரோ ஹோமியோபதி கருத்தரங்கம் திருச்சி விமான நிலையம் அடுத்துள்ள மொராய் சிட்டியில் மாதா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ் அண்ட் ரிசர்ச் சென்டர் அட்வைசர் பாரத் தலைமையில் நடைபெற்றது.

கருத்தரங்கில் மருத்துவர்கள் மோகன்ராம்பாபு, அப்துல்அஜீஸ், ஏகலைவன் நரேந்திரன், ராஜ்குமார் மற்றும் தமிழகம். பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் கருத்தாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாதா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் சென்டரின் லீகல் அட்வைசர் பரத்

எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவம் எல்லா எளிய மக்களுக்கும் சென்றடைய வேண்டும், எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்திற்கு மத்திய மாநில சுகாதாரத்துறை அங்கீகாரம் வழங்க வேண்டும், இந்தியாவில் முதன்முறையாக எலக்ட்ரோ ஓமியோபதி பயிற்சி மேற்கொள்வதற்கும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும் மாதா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரீசார்ச் சென்டர் அனுமதி பெற்றுள்ளது. எலக்ட்ரோ ஹோமியோபதி என்பது ஹெர்பல் கொண்டது.
எல்லா நோய்க்கும் நிவாரணம் அளிக்கக்கூடிய மருத்துவம். இதில் எந்தவித பாதிப்பும் வராது. எனவே ஹோமியோபதி கல்வி முறையிக்கு அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இது குறித்து தமிழக முதல்வருக்கும் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கோரிக்க வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.