குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை

0 177
Stalin trichy visit

 

திருச்சி, ஆக.16  மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் கிராமத்தை சேர்ந்த குடும்ப தகராறு காரணமாக 7 மாத கர்ப்பிணி பெண் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள நொச்சியம் கீழத்தெரு பகுதியை சேர்ந்த அரவிந்த்(29). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.  நொச்சியம் அருகே உள்ள திருவாசி கிராமம் அர்ஜுனன் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் கல்பனா(26).
அரவிந்த் – கல்பனா இருவரும் காதலித்து கடந்த 2018 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு 4 வயது ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது கல்பனா கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த ஆகஸ்ட் 4 தேதி கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அரவிந்த் கல்பனாவை அடித்ததாத கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கல்பனா வீட்டில் இருந்த மண்ணெண்ணை  எடுத்து தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயன்றார். அப்போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தீ குளித்த கல்பனாவை மீட்டு ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனையிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து கடந்த 7 ம் தேதி கல்பனாவிற்க்கு அறுவை சிகிச்சை செய்து ஆண் குழந்தையை எடுத்தனர். குழந்தையும் ஆபத்தான நிலையில் இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த கல்பனா நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கல்பானவின் தந்தை பன்னீர்செல்வம் (50) கொடுத்த புகாரின்பேரில் மண்ணச்சநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீக்குளித்த கல்பனா திருமணமாகி சில வருடங்கள் ஆவதால், அவரது சாவுக்கான காரணமானவர்களை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்ணச்சநல்லூர் போலீசாரிடம் கல்பனா பெற்றோர்கள் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர்.
மேலும் 7 மாத கர்ப்பிணி தீ குளித்து உயிரிழந்தது அப்பகுதியில் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.