இந்தி திணிப்புக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

0 231
Stalin trichy visit

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றிய அரசாங்கத்தின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) தமிழ்நாடு மாநில குழு சார்பில் அரைகூவல் விடப்படிருந்தது. அதன் அடிப்படையில் DYFI – SFI திருச்சி மாநகர் மாவட்ட குழுக்கள் சார்பில் தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு DYFI மாவட்ட தலைவர் பா.லெனின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் SFI மாவட்ட செயலாளர் தோழர். மோகன், DYFI மாவட்ட செயலாளர் தோழர்.சேதுபதி ஆகியோர் உரையாற்றினர். இந்த போராட்டத்தில் மாணவர் வாலிபர் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் என 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்தி திணிப்பிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இறுதியாக மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர். சூர்யா நன்றி கூறி போராட்டத்தை நிறைவு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.