ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்க மறைமுக முயற்சி – திருச்சியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத்தினர் குற்றச்சாட்டு!

0 592
Stalin trichy visit

சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்குமார் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போடப்பட்டு வருகிறது.மாடுகளை துன்புறுத்தும் வகையில் அமைந்துள்ள அந்த செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.அதை விசாரித்த நீதிபதிகள், உலக அளவில் மாடுகளை கட்டுப்படுத்த இந்த நடை முறைதான் பின்பற்றப்படுகிறது தற்போது இந்த வழக்கின் மூலம் புதிய விதிகளை வகுத்து உலகத்தை பின்பற்ற செய்வோம் என்று கருத்து தெரிவித்துள்ளதுடன் இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து இன்று திருச்சியில் செய்தியாளர்களை ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தினர் சந்தித்து பேசினார். அதில்…. “மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளை இடும் கயிறு போடுவது மிருக வதை தடை சட்டப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மாடுகளை கட்டுப்படுத்தும் இந்த நடைமுறை முன்னோர்களால் இன்று வரை பின்பற்றப்படும் வருகிறது.

வீட்டில் வளர்க்கக் கூடிய மாடுகளும் கூட மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல மூக்கணாங்கயிறு அவசியம், அவற்றை பட்டிகளில் அடைக்க மூக்கணாங்கயிறு அவசியம்,உழவு பணிகளுக்கு மாடுகளை பயன்படுத்த மூக்கணாங்கயிறு அவசியம் இப்படி காலம் காலமாக மாடுகளை கட்டுப்படுத்த மூக்கணாங்கயிறு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தனி நபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மூக்கணாங்கயிறுக்கு எதிராக வழக்கு தொடத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தும் வகையில் நாங்களும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.இந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் எங்களுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றனர்.
தொடர்ந்து பேசிய அவர்கள்,

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று தற்போது ஜல்லிக்கட்டு நடைப்பெற்று வருகிறது.அந்த போட்டிக்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் என மறைமுகமாக இது போன்ற வழக்குகள் தொடுக்கப்படுகிறது.மனு தாக்கல் செய்தவர் தனி நபராக இருந்தாலும் கூட அவர் பின்னனியில் பீட்டா போன்ற அமைப்புகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் இருக்கின்றனவோ என்கிற சந்தேகம் எழுகிறது.அதுமட்டுமல்லாமல்
மூக்கணாங்கயிறு போடவில்லை என்றால் பால் உற்பத்தி தடைபடும், பால் உற்பத்தி தடைபட்டால் பால் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளிலிருந்து பால் பவுடர்களை இறக்குமதி செய்ய வேண்டிய இடத்திற்கு தள்ளப்படுவோம். அதேபோல வெளிநாடுகளில் மட்டுமே மூக்கணாங்கயிறு இல்லாத பசுக்கள் குறிப்பாக ஜெர்சி பசுக்கள் உள்ளது அவற்றை இந்தியாவிற்கு கொண்டு வர மறைமுக முயற்சி நடப்பதாகவும் அதற்காகவும் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகமாக உள்ளது.

மற்ற விலங்குகளை கட்டுப்படுத்த சங்கிலி,அங்குசம் போன்றவை பயன்படுத்துவது போல தான் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறை பயன்படுத்தி வருகிறோம். எனவே இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். மத்திய,மாநில அரசுகள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.