எல்.ஐ.சி ஊழியர்கள்‌ என கூறி நூதன மோசடி – டெல்லி சென்று குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர்!

0 627
Stalin trichy visit

திருச்சி மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017ம் ஆண்டு வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தங்களை எல்.ஐ.சி. ஊழியர்கள் என தொலைபேசி மூலம் பேசி அறிமுகம் செய்துகொண்டு திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்த அம்துல்கனி பாட்சா (எ) APL பர்வீன் கனி என்பவரிடம் அவரது எல்.ஐ.சி பாலிசி முதிர்வடைந்துவிட்டதாகவும் அதனை மத்திய அரசின் சில திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனப்பேசி அதற்காக பல்வேறு தவணைகளாக ரூ. 86,36,963/- வரை ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்யச்சொல்லி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர்.

இது சம்மந்தமான வழக்கு திருச்சி மாநகர ஸ்ரீரங்கம் காவல் நிலைய பதிவு செய்யப்பட்டு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி சி.பி.சி.ஐ.டி புலன் விசாரணைக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் புலன் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி காவல்துறை இயக்குநர், சி.பி.சி.ஐ.டி காவல்துறை தலைவர், சிபி.சி.ஐ.டி காவல்துறை துணைத்தலைவர் மற்றும் சி.பி.சி.ஐ.டி மத்திய மண்டல காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் சி.பி.சி.ஐ.டி காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையில் சி.பி.சி.ஐ.டி காவல் ஆய்வாளர் லட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன், தலைமைக் காவலர் சந்திரசேகரன், ஆனந்த் பாபு ஆகியோர் டெல்லி சென்று முகாமிட்டு இவ்வழக்கில் கிழக்கு டெல்லிக்கு சென்று அபினேஷ்குமார்சிங் (எ) அமன்(26) என்பவரை கடந்த 29.07.2021ம் தேதி கைது செய்து உரிய சட்ட முறைகளைப் பின்பற்றி 01ம் தேதி திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 4 பொறுப்பு குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 6 அவர்கள் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்ப்பட்டார்கள்.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.