பிரதமர் மோடி படத்துடன் நூதன போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருச்சி மத்திய பஸ்நிலையம் பெரியார் சிலை அருகே பிரதமர் மோடி படத்துடன் நூதன போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.
உலக நாடுகளில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை குறைவாக இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி கொண்டு இருக்கும் பிரதமர் மோடிக்கு சாதனை செம்மல் என பட்டம் சூட்டி மலர் தூவுவோம் என கோஷமிட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை பறித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.