மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கான சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டம், முசிறி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கு ஏதுவாக மனுக்கள் பெறப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாசிரியர்கள் சாந்தி, புவனேஸ்வரி, சரண்யா ஆகியோர் மனுக்களை பூர்த்தி செய்து பெற்றுகொண்டனர். முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.