முதல்வர் வருகையையொட்டி ஏற்பாடுகள் தீவிரம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ம் தேதி திருச்சிக்கு வருகை தந்து நடைபெறுகின்ற அரசு விழாவினையொட்டி, கேர் கல்லூரி வளாகத்தில் விழா நிகழ்விடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, எம்.எல்.ஏ.க்கள். பழனியாண்டி, சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார். தியாகராஜன், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், முன்னாள் துணை மேயர் அன்பழகன் உள்பட பலர் உடனிருந்தனர்.