பள்ளியில் இருந்த கிருமி நாசினியை எடுத்து குடித்த மாணவனுக்கு தீவிர சிகிச்சை!

0 455
Stalin trichy visit

திருச்சி எடமலைப்பட்டி புதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசூரியன். இவருடைய மகன் தினேஷ்குமார்(வயது 14). இவர் எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் பள்ளிக்கு சென்ற தினேஷ்குமார் பள்ளியில் இருந்த கிருமிநாசினியை எடுத்து குடித்துவிட்டான். இதனால்

 

மயங்கி விழுந்த அவனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவன் எதற்காக கிருமிநாசினியை குடித்தான் என்று தெரியவில்லை. இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.