அரசுப்பள்ளியில் போதை இளைஞர் அத்துமீறல்: புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை ஆசிரியர்கள் வேதனை

0 295
Stalin trichy visit

திருச்சி, ஏப்.5  திருச்சி அருகே அரசுப்பள்ளியில் போதை இளைஞர்கள் அத்துமீறல். காவல்துறையில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை ஆசிரியர்கள் வேதனை

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து வாளாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி வளாகத்தின் பின்புற கட்டிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை போதையில் ஒரு பெண்ணுடன் இளைஞர் இருந்துள்ளனர். இதை அறிந்த அப்பள்ளி ஆசிரியர்கள் வீடியோ எடுக்க சென்றபோது மது போதையில் நள்ளிரவு இங்கு வந்து படுத்திருந்தோம் இப்போது செல்கிறோம் நாங்கள் இங்கு வந்தது என்ன தவறு என மிரட்டும் தோனியில் பேசியுள்ளார்.

மேலும் பள்ளியில் நள்ளிரவில் படுத்துவிட்டு செல்வதற்கு இது விடுதியா எனக் கேட்டதற்கு உங்களுக்கு என்ன பிரச்சனை என மிரட்டி உள்ளார்.மேலும் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளியில் நள்ளிரவில் பள்ளிக்குள் வந்து இருவரும் ஒன்றாக படுத்திருந்தும் தற்போது நாங்கள் கிளம்புகிறோம் என மிரட்டிய சம்பவம் கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆசிரியர்களுக்கு இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது குற்ற செயல்களுக்கும் துணை போகின்றார்களோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் இரவு நேரத்தில் பாதுகாவலர் யாரும் இல்லையா? ஏன் அங்கு பாதுகாவலர் நியமிக்கப்படவில்லை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்பாக கடந்த ஆறு மாதங்களாக பள்ளியில் குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பள்ளி ஆசிரியர்கள் காவல்துறைக்கு தெரிவித்ததால் உள்ளூர்வாசிகள் பள்ளி ஆசிரியரை மிரட்டுவதாகவும் குறிப்பாக தொடர்ந்து குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு வருபவர் வாளாடி புது ரோடு பகுதியை சேர்ந்த நவீன் என்பவர் தெரியவந்துள்ளது.

தற்போது அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் அறையின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே மது அருந்திவிட்டு மின்விசிறி டியூப் லைட் போன்றவற்றை அடித்து உடைத்துள்ளனர் காவல்துறைக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஏன் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த குற்றச்செயலை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.