ரேஷன் அரிசியை அரைத்து விற்ற மாவு மில்லுக்கு சீல் வைப்பு

0 427
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தில் அல்லா பிச்சை என்பவருக்கு சொந்தமான நாகூர் ஆண்டவர் மாவு மில்லில் ரேஷன் அரிசியை அரைத்து விற்பனை செய்வதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து பல புகார்கள் வர பெற்றதின் அடிப்படையில் மாவு மில்லில் வருவாய் கோட்டாட்சியர் பழனி குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்து எட்டு மூட்டை ரேஷன் அரிசி மாவு பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து வட்டாட்சியர் கருணாகரன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மாவு மில்லை பூட்டி சீல் வைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் அல்லாபிச்சையின் உறவினர் இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான குடோனில் 4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.