காவிரி குடிநீர் கிடைக்குமா? பேட்டவாய்த்தலை கிராமமக்கள் எதிர்பார்ப்பு
கானல் நீராகுமா ? காவிரி குடிநீர்?
காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் ஏக்கம்…
இதைக்கேட்டால் சற்று ஆச்சர்யாமாகவும், நம்பமுடியாமலும் கூட போகலாம்.
ஆம்
காவிரியிலிருந்து 330 கி.மீ க்கு அப்பால் உள்ள ஊர் மக்கள் எல்லாம் காவிரி நீரை குடிப்பதற்கும் ஏன் குளிப்பதற்கும் கூட உபயோகப்படுத்துகிறார்கள்.
இது மட்டுமல்ல, காவிரி நீர் குழாய் வழியாக செல்லும் வழியெங்கும் உள்ள மக்கள் அனைவரும் அருந்தி தாகத்தை தணித்துக்கொள்கிறார்கள்
ஆனால்
காவிரியின் கரையோரம் குடியிருக்கும் ஒன்றியத்திலேயே பெரிய ஊராட்சியாகவும், அந்த ஊராட்சியிலேயே பெரிய கிராமமாகவும் விளங்கும் கிராமத்தில் தான் இந்த அவல நிலை?
எங்குள்ளது இக்கிராமம்
தமிழ்நாட்டின் மையப்பகுதியாய் விளங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், அரங்கன் குடிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் வட்டத்தில், அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பேட்டவாய்த்தலை ஊராட்சியில் உள்ள தேவஸ்தானம் பகுதி வாழ் பொதுமக்களுக்குத்தான் இந்த அவலநிலை.
சரியாக காவிரியின் கரையோரம் உள்ள இந்த ஊருக்கு இதுநாள் வரை போர் தண்ணீர் மட்டும்தான் குடிநீர். காவிரி நீர் இப்போ வரும் அப்போ வரும் னு ஊராட்சித்தலைவர்கள் வாக்குறுதி மட்டுமேஇதுநாள் வரை கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் காவிரி குடிதண்ணீர் மட்டும் கிடைத்தபாடில்லை. கோரிக்கை விடுத்தாச்சு, அப்ரூவல் ஆயிடுச்சு, அப்டி இப்டினு சொல்றாங்களே தவிர இன்னும் வேலை ஆனபாடில்லை,
ஊராட்சி உறுப்பினர்களின் ஆயுட்காலம் 4வது ஆண்டை நோக்கி, அடுத்துவரும் ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படாவிட்டால் மீண்டும் கிடப்பில் போடப்பட்டுவிடுமோ என்று பொதுமக்கள் அச்சம்.
விரைவில் இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அறவழிப்போராட்டம் நடத்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா மக்களால் ஊராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்? தவித்த வாய்க்கு நல்ல தண்ணீராக காவிரி நீர் கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.