பேருந்து நிழற்குடை விரிவாக்கம் செய்ய பயணிகள் கோரிக்கை

0 402
Stalin trichy visit

பேருந்து நிழற்குடை விரிவாக்கம் செய்யப்படுமா?
பொதுமக்கள் எதிர்பாப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் நுழைவாயிலாக திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பேட்டவாய்த்தலை
இங்கு பேட்டவாய்த்தலை மற்றும் சிறுகமணி பேரூராட்சிகள் இயங்கிவருகிறது. மேலும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து இங்குதான் அனைத்து ஊர்களுக்குமான
நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் 24 மணிநேரமும் மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
பேட்டவாய்த்தலை பேருந்து நிலையமானது சிறுகமணி பேரூராட்சி எல்லைப்பகுதியில் வருகிறது. பேட்டவாய்த்தலை பேருந்து நிலையத்தில் நின்று செல்லும் அனைத்து பேருந்துகளுக்கான வரிகளை சிறுகமணி பேரூராட்சி பெற்றுவருகிறது.
சிறுமணி பேரூராட்சியால் திருச்சி மற்றும் கரூர் செல்லும் பயணிகளுக்கான நிழற்குடை பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது.
ஆனால் தற்போது பெருகி வரும் வாகனப்போக்குவரத்து மற்றும் பயணிகளின் எண்ணிக்கையால் பேட்டவாய்த்தலை பேருந்து நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
இதனால் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் கூட்டம் நிழற்குடையில் போதிய இடமின்றி இருப்பதால் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை பயணிகளுக்கு ஏற்படுகிறது.
மேலும், குழந்தைகள் வைத்திருப்போர், பெண்கள், வயதானோர் உள்ளிட்டோர் வெயிலில் வாடி வதங்கும் நிலை
இதையெல்லாம் விட மழைகாலத்திலும், கோடை காலத்தில் ஏற்படும் திடீர் மழையிலும் பேருந்தை விட்டு இறங்கும் அல்லது பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மழையில் நனைந்து உடல்நலக்குறைவு ஏற்படும் நிலை
எனவே சிறுகமணி பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலருக்கு பேருந்து பயணிகள், பொதுமக்கள், பேட்டவாய்த்தலை காவிரி மீட்புக்குழு , சமூகநலஆர்வலர்கள் சார்பாக
திருச்சிமாவட்ட சாலைபயனீட்டாளர் நல அமைப்பு கோரிக்கை
விரைந்து பயணிகள் நிழற்குடையை விரிவாக்கம் செய்து பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுகோள்

Leave A Reply

Your email address will not be published.