நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்
திருச்சி, ஜன.18 திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கிரா மத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் 5 ம் தேதி நடைபெறுவது வழக்கம்.
அதேபோன்று இந்த வருடமும் முறையாக அரசு அனுமதி பெற்று இன்று நடைபெற்று வருகிறது
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பிடிப்படாத காளையின் உரிமையா ளர்களுக்கும் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு, குளிர்சாதன பெட்டி, டிவி, சைக்கிள், பீரோ, குக்கர், கிரைண்டர், மிக்ஸி, கட்டில், சீலிங் பேன் போன்ற பரிசு பொருள்கள் வழங்கப்பட இருக்கின்றன.
திருச்சி,கரூர்,அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றறு , 400 மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்
ஜல்லிக்கட்டு போட்டியினை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.