ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் வேடுபறி உற்சவம்

0 366
Stalin trichy visit

திருச்சி ஶ்ரீரங்கத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வேடுபறி உற்சவம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆகும்..

இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல, இந்த ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது

திருமாலுக்கு தொண்டுகள் செய்த திருமங்கை மன்னன், தன்னிடம் இருந்த பெரும் பொருள்களை செலவு செய்தார்.

கைங்கர்யத்தை தொடர்ந்து செய்வதற்கு, தன்னிடம் பொருள் இல்லாமல், வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டதால், ஓம் நமோ நாராயணாய,என்ற நாமத்தை உபதேசித்து, அவரை ஆட்கொண்ட வைபம் தான், வேடுபறி உற்சவம்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், கடந்த 30ம் தேதி, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மறுநாள் 31 ஆம் தேதி முதல், 09‌ஆம் தேதி வரை பகல்பத்து உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பகல்பத்து உற்சவம் நிறைவு நாளன்று, நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் சேவை சாதித்தார். 10 ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெற்றது.

அன்று முதல் ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது. 7 ஆம் நாளான நேற்று நம்பெருமாள் கைத்தல சேவையும், 8 ஆம் நாளான இன்று மணல்வெளியில், திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது.

அப்போது, தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளினார். இன்று பரமபத வாசல் திறப்பு கிடையாது. ராப்பத்து உற்சவத்தின் 10 ஆம் நாளில் , தீர்த்தவாரியும், அடுத்த நாள் நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமுறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிறைவடையும்.

திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.