மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு விழா

0 307
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பழையபாளையம கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு பழையபாளையம், அழகாபுரி, சத்திரப்பட்டி, தாதப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி கோவில் முன்பு உள்ள திடலில் துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600 காளைகள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 250 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், மாடுபிடி வீரர்களை தூக்கிவீசி பந்தாடிய திறமைவாய்ந்த காளைகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் காளைகளே அதிகம் வெற்றி பெற்று தங்கள் உரிமையாளர்களுக்கு பரிசுகள் பெற்றுத்தந்தன. வெற்றிபெற்ற மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் வெள்ளிக்காசு, கட்டில், சேர், கடிகாரம், அண்டா, குடம் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.