சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் : துணை முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
திருச்சி, பிப். 19 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், சூரியூரில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில் துணை முதலமைச்சர் அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யமிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் பிரதீப்-குமார், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், அப்துல்சமது, மண்டல தலைவர் மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் , அருள் உள்பட அரசு அலுவலர்கள், ஜல்லிக்கட்டு காளைகளுடன் உரிமைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.