தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் ஒன்றிய நிதியமைச்சர் : அமைச்சர் கண்டனம்

0 149
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 31  தமிழராய் இருந்தும் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார் – ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்

திருச்சி மாவட்டம். மணப்பாறை ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 72- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது,

ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழ் நாட்டை சேர்ந்தவர் . ஆனால், பா.ஜ.க-வோடு சேர்ந்து கொண்டு தமிழ் நாட்டை எப்படி யெல்லாமோ வஞ்சித்து வருகிறார். நிதி தராமல் கூட்டு சதி செய்கிறார். என்று ஒன்றிய அரசை கடுமையாக தாக்கி பேசினார்.

உயிர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் பேசும்போது, நேற்று கட்சி ஆரம்பித்து முதலமைச்சராகி விடலாம்னு ஒரு நடிகர் நினைக்கிறார். அவர் சொல்கிறார் எனக்கும் திமுக வுக்கும் தான் போட்டி என்று. ஊரில் அந்த கட்சிக்கு ஆளே கிடையாது . 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும் என்று பேசினார்.
கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.