ரோட்டரி சங்கங்கள் சார்பில் பெண் ஓட்டுநர்களுக்கு 39 மின்சார ஆட்டோக்கள் வழங்கல்
திருச்சி, ஆக.7 சர்வதேச ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி மாவட்டம் 3000 த்தின் 2023-24 ம் ஆண்டிற்கான, மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி ராஜ்குமார் கனவு திட்டமான “அறம் – சிங்க பெண்ணே” என்ற திட்டத்தின் மூலம், அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பாக, 39 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, E -ஆட்டோ இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு, சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இயக்குனர் (2025-26) Rtn.AKS.PDG. முருகானந்தம்.M அவர்களுடைய Excel Maritime & Logistics Pvt Ltd (CSR Donor) நிறுவனம் மிக முக்கிய பங்களிப்பை செய்திருந்தது.
சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இயக்குனர் (2025-26) Rtn.AKS.PDG. முருகானந்தம்.M, முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி ராஜ்குமார், மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, மாவட்ட ஆளுநர் தேர்வு கார்த்திக், மாவட்ட ஆளுநர் நியமனம் RBS.சுப்பிரமணி, காவேரி மெடிக்கல் சென்டரின் இயக்குனர் அன்புச்செழியன், Rotary Public Image Co-ordinator ரமேஷ் பாபு, தேசிய கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.