கோபுரப்பட்டி – அரங்கன் துயிலும் இன்னொரு அற்புதத் தலம். ஏறத்தாழ எழுநுாறு ஆண்டுகள் கழித்து, கிளர்ந்தெழுந்தத் திருத்தலம். மண்ணும், கல்லும் சிதறிக்கிடந்த நிலை பலகடந்து, மனதிற்கினியனாய் அரங்கன் பள்ளிக்கொண்டு, கண்ணுக்கு விருந்தாய் மாறிய ஒரு மாயாஜாலம் நிகழ்த்திய ஊர்..! விண்ணும் மண்ணும் வணங்க, ஆறு நுாற்றாண்டுகள் கடந்து, கட்ந்த 27.08.2010 அன்று சிறப்பாக நடந்தேறிய மஹாஸம்ப்ரோக்ஷணம், தற்சமயம் பனிரெண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், நாம் காண, கண்டு வணங்கி மகிழ மீண்டும் விரைவில் நடைபெறவுள்ளது.! இதற்காக வருகின்ற வைகாசி மாதம் 18ம் நாள், 01-06-2022 அன்று பாலாலயம் நடைபெறவுள்ளது..! இதில் தாங்கள் அனைவரும் பங்குக் கொண்டு, இறையருள் பெறவேண்டி அன்புடன் அழைக்கின்றேன்.
முரளீ பட்டர்