லாரியிலிருந்து தவறி கீழே விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு…

0 374
Stalin trichy visit

இருங்களூரில் லாரியிலிருந்து தவறி கீழே விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூரில் உள்ள அரிசி குடோனில் லாரியிலிருந்து தவறி கீழே விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

.இருங்களூரில் அரிசி குடோன் இயங்கி் வருகிறது. இந்த குடோனில் லால்குடி அருகே நடராஜபுரம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான ஜெய்சங்கர் மூட்டைத் தூக்கும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.இன்று லாரியில் அரிசி ஏற்றிவிட்டு லாரியின் மேல் தார்ப்பாய் போட்டுள்ளனர்.அப்போது லாரியின் மேல் இருந்த ஜெய்சங்கர் தார்ப்பாய் போடும் போது எதிர்பாராத விதமாக தார்ப்பாய் வழுக்கி கீழே விழுந்தார்.இதில். அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.