தா.பேட்டையில் சூரசம்ஹாரம் விழா…
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹார விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு தா.பேட்டை காசி விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் கோவிலில் முகூர்த்த கால் நடுதல், மதுரைவீரன் சுவாமி கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜை செய்து சிவாலயம் வருதல், முருகப்பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், வழிபாடுகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிவாலயத்தில் அன்னை காசி விசாலாட்சியிடம் சக்தி வேல் பெறும் நிகழ்வு நடந்தது. சக்திவேலை பெற்றுக் கொண்ட முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் ராஜவீதியில் எழுந்தருளி யானை முகசூரன், சிங்கமுகன், பானுகோபன் , சூரபத்மன் ஆகிய அசுரர்களை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. தேவர்படை, அசுரப்படை வேடமணிந்த பக்தர்கள் போரில் ஈடுபட்ட காட்சி தத்ருபமாக இருந்தது. விழாவில் திரளாக கலந்து கொண்ட பக்கர்கள்அசுரன் தலை கொய்த போது அரோகரா, அரோகரா என்று விண்ணதிர கோஷம் எழுப்பினர். பின்னர் சிவாலயத்தில் சென்ற முருகப் பெருமானுக்கு 7 விதமான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.