சமயபுரம் மாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா…

0 387
Stalin trichy visit

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலகங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகும். இந்த கோயிலில் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கவும், நோய் நொடிகள் இல்லாமல் மக்கள் வாழவும், ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கவும் அனைவருக்கும் சகல சௌபாக்கியம் கிடைக்க வேண்டியும் கடந்த 15 ஆண்டுகளுக்கு பின் நேற்று லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.இதனையொட்டி கோயில் கொடிமரம் அருகே உற்சவ அம்மன் தங்க கவசம் உடை அணிந்து தங்க சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.