லால்குடி அரசுக் கலைக்கல்லூரிக்கு ரூ. 1கோடி செலவில் கலையரங்கம் : அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் நுண்கலை மன்ற விழா என முப்பெரும் விழா கல்லூரியின் முதல்வர் முனைவர் மாரியம்மாள் தலைமையில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் சிறப்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு லால்குடி பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் கல்வி பயில அரசு கல்லூரி வேண்டுமென மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் பெற்று தொடங்கி வைத்தோம். இந்த கல்லூரிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. ஒரு கோடி மதிப்பில் புதிய கலையரங்கம் அமைத்து தரப்படும். மாணவ,மனைவிகள் நன்கு படிக்க வேண்டும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும் என மாணவரிடம் உரையாற்றினார்.பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.