இறகுகள் முதியோர் இல்லத்தில்  குடியரசுதின விழா

0 353
Stalin trichy visit

திருச்சி, ஜன.27 இறகுகள் முதியோர் இல்லத்தில் குடியரசு தினவிழா முன்னிட்டு  இறகுகள் அகாடமியின் நிறுவனர் மரிய மெர்சிக்கு திருச்சி பாரம்பரியமிக்க கோபால் தாஸ் ஜுவல்லரி சார்பாக சிறந்த சமூக சேவை நிர்வாகிகான கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இறகுகள் தொண்டு நிறுவன அகடமின் நிறுவனர் மரிய மெர்சிக்கு  இறகுகள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் இறகுகள் அகாடமி மாணவர்கள்  வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மரிய மெர்சி  குடியரசு தின வரலாறை மிகச் சிறப்பாகவும் துல்லியமாகவும் முதியவர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் புரியும் வண்ணம் எடுத்து உரைத்தார்.  மரிய மெர்சிக்கு இறகுகள் முதியோர் இல்லத்தில் உள்ள கற்பகம் (96 வயது)  ரிட்டையர்டு தலைமை ஆசிரியை மற்றும் இக்பால் ( 86 வயது) BHEL நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் அவர்களிடம் தனது விருதை பெற்றுக் கொண்டார்

Leave A Reply

Your email address will not be published.