திருச்சிக்கு லீவ்..! பரீட்சைக்கு ஸ்கூல்..! ஆட்சியர் உத்தரவு..!
திருச்சி. ஏப்ரல்.04, திருச்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு. சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத்தேர் திருவிழா வருகிற (18.04.2023) ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே, அன்று திருச்சி மாவட்டத்தில் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், இவ்விடுமுறையினை ஈடுசெய்யும் விதமாக 29.04.2023 சனிக்கிழமையன்று பணிநாளாக செயல்படும் என்றும்,
இதே போன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரை திருவிழாவும் வருகிற 19 ஆம் தேதி புதன்கிழமையன்று நடைபெற உள்ளதால், அன்றும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது எனவும், இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற 13 ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது என்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என்றும், தேர்வெழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும், திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.